முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்வர்கள் சிறப்பு பிரார்த்தனை

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 23 - புனித வெள்ளியான நேற்று தேவாலயங்களில் கிறிஸ்வர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.     இயேசு கிறிஸ்துவின் சிலுவை வழிபாடுகளை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் கடந்த 40 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு அனுசரித்து வருகிறார்கள். சாம்பல் புதனில் தொடங்கி தேவாலயங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடித்து இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.  நேற்று முன்தினம் தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை மதுரை தூயமரியன்னை பேராலயத்தில் சிலுவை சுமக்கும் நிகழ்வுகளும் நடந்தன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த புனித வெள்ளி நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. மதுரையில் நரிமேடு, புதூர், கீழவாசல், பெரியார்பஸ்நிலையம், தெற்குவாசல் காளவாசல், அண்ணாநகர் உள்ளிட்ட மதுரையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.

   இயேசு கிறிஸ்து 3ம் நாள் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கிறிஸ்வர்கள் புத்தாடை அணிந்து  தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago