முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் நிதி முறைகேடு: ப்ரீத்தி ஜிந்தாவிடம் விசாரணை

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

மும்பை, மார்ச். 7 - இந்தியன் பிரீமியர் லீக்கின் 2 வது சீசன் போட்டித் தொடரின்போது நடந்த நிதி முறைகேடுகள் குறித்து நடிகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அமலாக்ப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது ப்ரீத்தி சொன்ன தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது. இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், விசாரணைக்கு வருமாறு ப்ரீத்திக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அவரும் வந்து ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார்.

இதற்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர், முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஷாருக் கான் ஆகியோரும் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

தென் ஆப்பிரிக்காவில் 2009 ம் ஆண்டு 2 வது ஐ.பி.எல் தொடர் நடந்தது. அப்போது அந்தத் தொடரில் முறைகேடான நிதி பெருமளவில் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து இந்தத் தொடருக்காக செலவழிக்கப்பட்ட நிதி குறித்த விசாரணையை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக முன்னாள் ஐ.பி.எல் கமிஷனரான லலித் மோடிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!