முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் நூதன முறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - பள்ளி கல்வி கட்டணம் சம்பந்தமாக புதிய அறிவிப்பு வருவதற்குள் பெற்றோர்களிடம் நூதன முறையில் வேறு வேறு பெயர்களில் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு:-

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணமாக பெற்றோர்களிடம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என அரசு முடிவு செய்கிறது. பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, இடம், ஆய்வகம், ஆசிரியர்கள் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று மேல் முறையீடு செய்த 6400 தனியார் பள்ளிகளின் மனுக்கள் மீது விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு nullநீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான கமிட்டி அடுத்த வாரத்தில் புதிய கல்வி கட்டண அறிக்கையை அரசிடம் சமர்பிக்க உள்ளது. புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் வரை 2011​12​ம் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது. 1 முதல் 9​ம் வகுப்பு வரை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டு இருந்தது. அதை பொருட்படுத்தாமல் தனியார் பள்ளிகள் வழக்கம் போல வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. பெற்றோர்களிடம் கூடுதலாக கல்வி கட்டணம் கட்டச்சொல்லி வற்புறுத்தி பெறுகின்றனர். தாங்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த விரும்பவில்லை என்றால் மாற்றுசான்றை (டி.சி.) பெற்றுச்செல்லுமாறு மிரட்டுகின்றனர். 

அதற்கு பயந்து பெற்றோர்கள் கூடுதலாக கல்வி கட்டணம் செலுத்துகின்றனர். ரூ.20 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என அவரவர் இஷ்டம் போல் 1 முதல் 9​ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு பெறுகிறார்கள். கல்வி கட்டணம் பெறுவதில் புதிய நடை முறையை தனியார் பள்ளிகள் தற்போது பின்பற்றுகின்றன. பாங்கியில் செலுத்த கூடிய செலானில் பள்ளி பெயரில் ஒரு தொகையும், பிரினர்டர்ஸ் மற்றும் பப்ளிசர்ஸ் பெயரில் மீதி தொகையும் பெறுகின்றனர். ஆனால் செலானில் எந்த வகைக்கு எவ்வளவு கட்டணம் என்ற விவரமும் கிடையாது. பெற்றோர்களை கட்டாயப்படுத்தி கெடுபிடி வசூலில் தனியார் பள்ளிகள் ஈடுபடுகின்றன. 

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும், பெரவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் இது போன்று வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கல்வி கட்டணத்தை பெற்றோர்களிடம் இருந்து மறைமுகமாக பல்வேறு பெயர்களில் வசூலிப்பதற்கு தமிழ்நாடு மாணவர்கள் ​ பெற்றோர் கூட்டமைப்பு சங்கம் கண்டித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago