எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 25 - புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அன்பையும், மனிதநேயத்தையும் மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்ய தன் வாழ்நாளை அர்ப்பணித்த புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணற்ற இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும், இன்ன பிற மக்கள் நலப் பணியாற்றும் அமைப்புகளையும் உருவாக்கி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களுக்கும், உலகெங்கும் உள்ள ஏழை, எளியோர்க்கும் அரும் பணியாற்றியவர் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபா. அவருடைய மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு.
புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா அவர்களை இழந்து வாடும் அவரது பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


