முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூயார்க்கை நோக்கி விரைந்து வரும் எரிகல்: நாசா ஆய்வு

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மார்ச். 22 - நியூயார்க் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய எரிகல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். எரிகல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித எரிகற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அடங்கும். இந்த விண்கல்லானது மனித நாகரிகத்தை அழித்துவிடும் அபாயம் இருக்கிறது. 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களில், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவீத எரிகற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. 

விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் எரிகற்கள் பூமியை தாக்குவதை சமாளிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டியது அனைத்தும் அமெரிக்காவை சார்ந்து இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர் விட்டமுடைய எரிகல் ஒன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி வந்தது. ஆனால் அதை ரஷ்யா குண்டு வீசித் தகர்த்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. 

அதன் பிறகு மிகப்பெரிய எரிகல் ஒன்று சமீபத்தில் பூமியிலிருந்து 17,200 மைல் தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண்கலங்கள் படமெடுத்தன. பூமியை தாக்கும் எரிகற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறது என பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago