முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்த்திருத்தம் தொடரும்

சனிக்கிழமை, 23 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

டெல்லி:மார்ச் - 24 - அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்த்திருத்தம் தொடரும் என மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் இன்று அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த தேசிய அளவிலான பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ாஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. பொருளாதர மந்த நிலையை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அன்னிய நேரடி முதலீட்டை நாம் அனுமதித்ததன் மூலம் பொருளாதாரத்தில் நாம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறோம். இந்திய பொருளாதாரத்தை மேலும் உயர்த்த, அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும். உறுதியான நிலைப்பாட்டுடன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் மூலம் நமது பொருளாதாரத்தை மீண்டும் உயர் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். உணவு பாதுகாப்பு மசோதா தயார் நிலையில் உள்ளது. விரைவில் பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறும் என்று நம்புகிறேன். வெளிநாட்டு அமைப்பு சார் முதலீட்டாளர்கள் (எப்ஐஐ)அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பொரேட் பத்திரங்களில் முதலீடு செய்ய வசதியாக அடுத்த கட்ட சீர்த்திருத்தம் அமையும். அதன்படி, ஒரு பக்கம் அரசுப் பத்திரங்களில் எப்ஐஐ முதலீடு 25 பில்லியன் டாலர்களாகவும், கார்ப்பொரேட் பாண்ட்களில் 51 பில்லியன் டாலராகவும் இருக்கும். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இது தொடரும். இதுபோன்ற சீர்த்திருத்தங்கள் தொடரும். இதன் மூலம் ஏராளமான அந்நிய நேரடி முதலீடு நமது பொருளாதாரத்தை மேம்படுத்தும்,ா என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony