முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் திரும்பினார் முஷாரப்!

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: மார்ச் - 25 - தலிபான்களின் மிரட்டலையும் மீறி பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அறிவித்தபடி இன்று அந்நாட்டுக்குத் திரும்பியுள்ளார். பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் அதிபரானார் பர்வேஸ் முஷாரப். அவர் ஆட்சிக் காலத்தில் பெனாசிர் புட்டோ படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் முஷாரப் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானை விட்டு அவர் வெளியேறினார். சவூதி அரேபியா மற்றும் இங்கிலாந்தில் அவர் தஞ்சமடைந்தார். இந்நிலையில் மே 11-ந் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இத் தேர்தலில் தாமும் பங்கேற்பதால் நாடு திரும்புவேன் என்று முஷாரப் அறிவித்திருந்தார். அத்துடன் தம் மீதான வழக்குகளில் முன் ஜாமீனும் பெற்றிருந்தார். அதே நேரத்தில் அவர் பாகிஸ்தான் திரும்பினார் கொலை செய்யப்படுவார் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர். இன்று துபையில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு முஷாரப் வந்தடைந்துள்ளார். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago