எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.28 - இலங்கையில் மனித உரிமை மீறல், மிருகத்தனமான அடக்குமுறை, போர்க்குற்றம், இனப்படுகொலை ஆகியவை நிகழ்த்தப்பட்டுள்ளது ஐ.நா.குழுவின் அறிக்கை மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ராணுவத்தளபதிகள், மூத்த அமைச்சர்கள் ஆகியோரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி நடவடிக்கை எடுக்க ஐ.நா.சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என ஜெயலலிதா கோரியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டு விட்டது. அப்பாவி மக்களுக்கு சேதமின்மை என்ற கொள்கையின் அடிப்படையில் மனிதாபிமான மீட்புப் பணி நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் இலங்கை அரசின் இனிப்பான வாதத்தினை 214 பக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தவிடுபொடி ஆக்கியுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு 16.9.2010 அன்று தனது பணியை தொடங்கியது. இலங்கை ராணுவத்திற்கும், எல்.டி.டி.ஈ.க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான செப்டம்பர் 2008 முதல் மே 2009 வரையிலான காலத்தையும், அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் இந்தக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டது.
குண்டு மழை பொழிவிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதே இலங்கை அரசின் ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்ததை நம்பிக்கையூட்டும் ஆதாரங்களுடன் மூன்று நபர் வல்லுநர் குழு கண்டறிந்துள்ளது.
மிகப் பெரிய ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அதிகாரnullர்வமாக அறிவித்து இருந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் திட்டமிட்டு குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்று வல்லுநர் குழு முடிவு செய்துள்ளது.
மிகப் பெரிய பீரங்கிகளையும், குண்டுகளையும் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் வட இலங்கையில் உள்ள வன்னி பகுதியைச் சுற்றி மிகப் பெரிய தடையை இலங்கை அரசும் அதன் படைகளும் உருவாக்கின. மயக்க மருந்து அல்லது வலியை இழக்கச் செய்யும் மாத்திரைகள் எதுவும் இல்லாமல், மருத்துவ காரணங்களுக்காக தேக உறுப்புகளை வெட்டி எடுக்கும் மருத்துவ மனைகள் மீதும்; மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் மரங்களுக்கு கீழ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பகுதிகளிலும் குறி வைத்து இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது.
உணவு மற்றும் குடிநீnullர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளனர். உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போர்ப் பகுதிக்கு சென்றடையக் கூடாது என்பதற்காகவே, போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்து மதிப்பீடு செய்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்துதல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து தப்ப நினைக்கும் அப்பாவி தமிழர்களை கொல்லுதல் மற்றும் கூலி வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துதல் உட்பட பல மனித உரிமை மீறல்களை எல்.டி.டி.ஈ. நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், போர் நடந்த கடைசி மாதங்களில், எல்.டி.டி.ஈ. மிகவும் குன்றிய நிலையில் இருந்ததாகவும், எனவே, எல்.டி.டி.ஈ.யின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, தன்னுடைய சொந்தக் குடிமக்களான தமிழ் மக்கள் மீது விபரீத அளவு தாக்குதல் நடத்தியதை இலங்கை அரசு நியாயப்படுத்த முடியாது என்றும், இது இனப் படுகொலை தான் என்றும், நாகரிகம் மற்றும் பண்பாடுள்ள மக்கள் இதை இனப் படுகொலை என்று கருத்தில் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளி வராமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்பட்டால், இது தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமரச முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடும் என்ற வாதத்தை இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே முன்வைத்தார். ஐ.நா. அறிக்கையை வெளியிடாமல் தடுப்பதற்காக மஹிந்தா ராஜபக்ஷேவின் சகோதரர் கோத்தபைய ராஜபக்ஷே அமெரிக்காவிற்கு பறந்து சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா. அறிக்கை வெளியிடப்படாமல் இருக்க தன்னால் இயன்ற உதவியை செய்யுமாறு மஹிந்தா ராஜபக்ஷே பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியதை இலங்கை அரசு உறுதி செய்ததாக ஊடகங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனை நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் ஐ.நா. குழுவின் அறிக்கை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் இனிமேலும் இந்தியா மவுன பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
மொழி, மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, கடலுக்கு அப்பால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது சொந்த நாட்டிலேயே ஆற்றொணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது. இந்த நிலைமையை சரி செய்ய, ஏராளமானவற்றை இந்தியாவால் நிச்சயம் செய்ய முடியும்.
இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; கண்ணியத்துடன் வாழ அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், சர்வதேச இயக்கம் ஒன்றை தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின், எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் அடக்குமுறை என்பது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது, ஒருதலைபட்சமானது என்ற முந்தைய கூற்றினை தகர்த்தெறிந்து, இலங்கையில் மனித உரிமை மீறல்களும், மிருகத்தனமான அடக்குமுறைகளும் நடைபெற்றதை ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது. எனவே, ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக மஹிந்தா ராஜபக்ஷே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீnullதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இதைச் செய்யாமல், தற்போது போல் தொடர்ந்து இந்தியா மவுனம் சாதிக்குமேயானால், கண்ணியத்துடன் வாழ்வதற்குரிய உரிமை உட்பட இலங்கை தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களை தன்னுடைய நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் ராஜபக்ஷேவின் கொள்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்று தற்போது கூறப்படும் கூற்றிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும். இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஊழல், மோசடிகளை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
16 Nov 2025சென்னை : ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என்றும், தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-11-2025.
16 Nov 2025 -
பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
16 Nov 2025பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?
16 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
நமது தேசத்தை பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
16 Nov 2025லக்னோ : நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது
16 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்
16 Nov 2025சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்களிடம் 7-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
16 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.
16 Nov 2025பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.


