முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டுக்கு 1.25 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கால் சாவு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை,ஏப்.29 - இந்தியாவில் ஆண்டுக்கு 1.25 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றன என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும், அமெரிக்காவை சேர்ந்த சென்ட்ரல் பார்டிசீஸ் கன்ட்ரோல் அண்ட் பிரிவென்சன் என்ற அமைப்பும் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின்படி இந்தியாவில் ஆண்டு தோறும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 1.25 குழந்தைகள் ரோடா வைரஸ் கேஸ்ட்ரோ என்டரிட்டிஸ் என்ற கிருமியின் பாதிப்பால் உண்டாகும் வயிற்றுப் போக்கால் இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் 5 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் ஆண்டு தோறும் இறக்கின்றனர். இதில் 25 சதவீத மரணங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. இந்த இறப்பு சதவீதத்தை குறைக்க வேண்டும் என்றால் தேசிய அளவில் போடா வைரஸ் தடுப்பு மருந்து திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்தி உள்ளது. ரோடாவைரஸ் என்பது சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வின்றி அனைத்து தரப்பு குழந்தைகளையும் பாதிக்கக் கூடிய ஒரு கிருமியாகும். இளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு உண்டாக முக்கிய காரணமாக இக்கிருமி திகழ்கிறது. இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த தேசிய ரோடோவைரஸ் தடுப்பு மருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு 44 ஆயிரம் மரணங்கள், 2 லட்சத்து 93 ஆயிரம் மருத்துவ அனுமதிகளை மற்றும் 3 லட்சத்து 28 ஆயிரம் புறநோயாளிகளை தவிர்க்கலாம் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago