முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் ஆயுதம் வந்த விவகாரம் நீதிமன்ற விசாரணை வேண்டும் : புத்ததேவ்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஏப்.  -​30 -  விமானத்தில் இருந்து ஆயுதம் கொண்டு வந்து இறக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி கோரியுள்ளார்.
கடந்த 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி நள்ளிரவில் புருலியாவிற்கு ஒரு வெளிநாட்டு  விமானம் ரகசியமாக வந்தது. அந்த விமானத்தில் பயங்கர ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 164 ஆண்டுகளான பின்னர் பல ரகசியங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நீதிமன்ற விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி கோரியுள்ளார். இந்த ஆயுதம் கொண்டுவரப்பட்டதில் அரசியல் சதி நடந்துள்ளது. அந்த சதி என்னவென்று தெரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புத்ததேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இந்தமாதிரி ஆயுதம் இறக்குமதி செய்யப்பட்டதில் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து ஏதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சம்பவம் நடந்து ஒரு சில நாட்கள் கழித்து உஷார்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு கடிதமும் வந்தது என்றும் அந்த அறிக்கையில் புத்ததேவ் மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago