முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விகாஸ் யாதவுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் மறுப்பு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப். - 30 - கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜ்யசபை உறுப்பினர் விகாஸ் யாதவுக்கு ஜாமீன் தர சுப்ரீம்கோர்ட்டு மறுத்துவிட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்த விகாஸ் யாதவ், தன்னுடைய சகோதரியின் நண்பர் நதீஷ் கதரா என்பவரை படுகொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விகாஸ் யாதவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனையொட்டி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் விகாஸ் யாதவின் சகோதரருக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதனையொட்டி தமக்கு 3 மாத ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, திருமணம் நடக்கும் நாளில் மட்டும் 6 மணி நேரம் ஜாமீன் மட்டும் வழங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம்கோர்ட்டும் இந்த மனுவை நிராகரித்துவிட்டது. டெல்லி ஐகோர்ட்டு உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும் 3 மாதம் ஜாமீன் தருவதற்கு உங்களுக்கு திருமணம் நடக்கவில்லை. உங்கள் சகோதரருக்குத்தான் திருமணம் நடக்கிறது. அதனால் உங்களுக்கு திருமண நாளன்று 6 மணி நேரம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ள ஐகோர்ட்டு உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் வி.எஸ். சர்புர்கர், டி.எஸ். தாகூர் ஆகியோர் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்