ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங்: அங்கீத் சவான் ஒப்புதல்..!

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே. 18 - ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங்கில் தான் ்ஈடுபட்டதாக டெல்லி போலீசாரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அங்கீத் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். போலீஸ் விசாரணையின்போது இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் அளித்ததாக டைம்ஸ் நவ் டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது. 

தான் தவறு செய்து விட்டதாகவும் சவான் அப்போது சென்னாராம். 5 நாள் போலீஸ் காவலில் சவான், ஸ்ரீசாந்த், சண்டிலா ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். போலீஸ் விசாரணையின்போது ஆமாம், நான் தவறு செய்து விட்டேன் என்று ஒப்புக் கொண்டாராம் சவான். ரூ. 60 லட்சம் வாங்கியவர் சவான் ஒரு ஓவரை பிக்ஸ் செய்வதற்காக ரூ. 60 லட்சம் பணம் வாங்கியவர் என்பது போலீசாரின் குற்றச்சாட்டாகும். மும்பை போட்டிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது இந்த பிக்ஸிங் நடந்தது என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளது. ஸ்ரீசாந்த்தின் வாக்குமூலம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: