பஞ்சாப் கிங்ஸ் லெவன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது

சனிக்கிழமை, 18 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

தரம்சாலா, மே. 19 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தர்ம சாலாவில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவ ன் அணி 50 ரன் வித்தியாசத்தில் மும் பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி தரப்பில் ஆல்ரவுண்டர் அசார் மெஹ் மூத் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவ ருக்குப் பக்கபலமாக, ஷான் மார்ஷ் மற்றும் வொக்ரா ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, சந்தீப் சர் மா, சாவ்லா, அசார் மெஹ்மூத், பிரவீ ன் குமார், மற்றும் அவானா ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தது. 

ஐ.பி.எல். போட்டியின் 69-வது லீக் ஆட்டம் இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நேற்று பகலிரவு ஆட்ட மாக நடந்தது. இதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்னைக் குவித்தது. 

பஞ்சாப் அணி தரப்பில், ஆல்ரவுண்டர் அசார் மெஹ்மூத் அதிரடியாக ஆடி 44 பந்தில் 80 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். ஷான் மார்ஷ் 47 பந்தில் 63 ரன் எடுத் தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். தவிர, வொக்ரா 20 ரன் எடுத்தார். 

மும்பை அணி சார்பில், முன்னணி வே கப் பந்து வீச்சாளரான மலிங்கா 39 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, கொல்டர் நைல், ஆர். தவான், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

மும்பை அணி 184 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ் சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 133 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் பஞ் சாப் அணி 50 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

மும்பை அணி தரப்பில், ராயுடு அதிக பட்சமாக 22 பந்தில் 26 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, கே ப்டன் ரோகித் சர்மா 25 பந்தில் 25 ரன் னையும், பொல்லார்டு 21 பந்தில் 22 ரன்னையும், டாரே 12 ரன்னையும், ஆர். தவான் 14 ரன்னையும், எடுத்தனர். 

பஞ்சாப் அணி சார்பில், சந்தீப் சர்மா 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, பி.பி. சாவ்லா மற்றும் அசார் மெஹ்மூத் தலா 2 விக்கெட்டும், பிரவீன் குமார் மற்றும் அவானா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அசார் மெஹ்மூத் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: