எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே. - 1 - தொழிலாளர்கள் வாழ்வில், வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று மே தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை மேதினி எங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் எனதருமை தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாலை முதல் அந்தி சாயும் வரை கணக்கில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பதை எதிர்த்தும், எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தியும் எழுந்த போராட்டத்தின் வெற்றி தினமே மே தினம்! உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைத்த தினம் மே தினம்! இந்த மே தின நன்னாளில், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிலாளர்களுக்கு உரிய பயன்களை அடையக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று வாழ்த்தி, எனதருமை தொழிலாளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது தொழிலாளர் தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |