முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணி குருநாத் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை

வியாழக்கிழமை, 23 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.24 - ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் மும்பை போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியுமான குருநாத் மெய்யப்பனின் சென்னை வீட்டில் மும்பை போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய வீரர்கள் சிக்கினர். இதை தொடர்ந்தது சூடு பிடிக்க துவங்கிய இப்பிரச்சினை தற்போது தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை, கோயம்புத்தூர், மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் பல நகரங்களில் இடைத்தரகர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஒரு தரகர் கொடுத்த தகவலின்படி, இந்தி நடிகர் தாராசிங்கின் மகன் நடிகர் வின்டு சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பிக்சிங்கில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார்.

மேலும் அவர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் மருமகனும் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரியுமான குருநாத் மெய்யப்பனுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போனை ஆய்வு செய்த மும்பை போலீசார், சென்னை அணியின் தலைவர் குருநாத்துடன் விண்டு தாராசிங் பேசிய அடுத்த நிமிடம் அவர் சூதாட்டத் தரகர்களுடன் பேசியிருப்பதைக் கண்டறிந்தனர். எனவே, இந்த சூதாட்டத் தொடர்பில் குருநாத்தும் இருக்கலாம் என்ற ரீதியில் மும்பை போலீசார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

அதனடிப்படையில் நேற்று காலை சென்னை வந்த 3 மும்பை போலீசார் சீனிவாசன் வீட்டிற்குச் சென்றனர். அப்போது சீனிவாசன் அங்கு இல்லை.  பிசிசிஐ தலைவர் சீனிவாசன் சூதாட்ட தொடர்பில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்த போலீசார் அவரது உறவினர் சிக்கியிருப்பதால் சீனிவாசனிடம் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர். நேற்று காலை 10 மணி முதல் சென்னை போட் கிளப்பில் உள்ள சீனிவாசனின் வீட்டில் இந்த விசாரணை நடந்தது.

இதையடுத்து குருநாத் மெய்யப்பனிடமும் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு சென்றனர். அவர் அங்கு இல்லாததால் அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago