ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

வியாழக்கிழமை, 23 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா,மே. 24 - ஐ.பி.எல். - 6 போட்டியில் இறுதிச் சுற் றுக்கு தகுதி பெறும் அணி எது என்பது இன்று முடிவாகும். இதற்காக மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆண்டிற்கான பெப்சி கோப்பை க்கான ஐ.பி.எல் போட்டி கடந்த ஒன்றரை மாத காலத்திற்கு மேலாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

முன்னதாக ஐ.பி.எல் டி- 20 போட்டியி ல் 72 லீக் ஆட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பிளே ஆப் சுற்று நடந்து வருகிறது. 

பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும் பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

பின்பு 22 -ம் தேதி நடந்த குவாலிபயர் - 1 ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குவாலிபயர் - 1 ல் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி போட்டியில் இருந்து வெளியேறியது. அடுத்ததாக குராலிப யர் - 2 ல் தோற்கும் அணியும் வெளி யேறும். 

கொல்கத்தாவில் இன்று நடக்க இருக் கும் குவாலிபயர் - 2 ஆட்டத்தில் சென் னை அணியிடம் தோற்ற மும்பை அணியும், குவாலிபயர் - 1 ல் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. 

இந்த வருட ஐ.பி.எல். போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டம் வரும் 26-ம் தே தி கொல்கத்தாவில் நடக்க இருக்கிறது. இதில் சென்னை அணியுடன் மோதும் அணி எது என்பது இன்று முடிவாகும். 

டெல்லியில் 21-ம் தேதி நடந்த குவாலி பயர் - 1 ல் முதலில் களம் இறங்கிய ஐத ராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்னை எடுத்தது. 

ஐதராபாத் அணி தரப்பில் ஷிகார் தவா ன் அதிகபட்சமாக 39 பந்தில் 33 ரன் எடு த்தார். தவிர, கேப்டன் ஒயிட் 31 ரன் னையும், டேரன் சம்மி 29 ரன்னையும், சமன்டிரே 14 ரன்னையும், சி. பெரீரா 11 ரன்னையும், எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் மாலிக் 14 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத் தார். தவிர, பால்க்னர், வாட்சன் மற் றும் திரிவேதி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின்பு 133 ரன்னை எடுத்தால் வெற்றி  பெறலாம் என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்னை எடு த்தது. 

இதனால் இந்த குவாலிபயர் - 1 ஆட்ட த்தில் கேப்டன் ராகுல் டிராவிட் தலை மையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. 

ராஜஸ்தான் அணி தரப்பில், ஹாட்கே 29 பந்தில் 54 ரன்னை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தவிர, வாட்சன் 24 ரன்னையும், ரகானே 18 ரன்னையும், கேப்டன் டிரா விட் 12 ரன்னையும், சாம்சன் 10  ரன் னையும், பால்க்னர் 11 ரன்னையும் எடு த்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநா யகனாக ஹாட்கே தேர்வு செய்யப்பட்டார். 

மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். அந்த அணி பேட்டிங் மற்றும் பெளலிங்கில் பல மான அணியாக உள்ளது. 

ராஜஸ்தான் அணியில் கேப்டன்  டிரா விட், ரகானே, ஷேன் வாட்சன், ஹாட்கே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்த சீசனில் அவர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். 

பெளலிங்கைப் பொறுத்தவரை பால் க்னர், கூப்பர் மற்றும் மாலிக் ஆகி யோர் நன்றாக பந்து வீசி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக திரிவேதி மற் றும் வாட்சன் ஆகியோர் உள்ளனர். 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடை யேயான இன்றைய ஆட்டம் கொல் கத்தாவில் இரவு 8.00 மணிக்கு துவங்கு கிறது. இந்தப் போட்டி சோனி மேக்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேர டியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: