எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூன்.1 - சென்னையில் 2 வங்கிகளில் போலியான ஆவனங்களை கொடுத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இவர், முதல்வரின் பேரன் என்று கூறி தனது மோசடி லீலைகளை அரங்கேற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதே போல பெங்களுாரிலும் சுகாஷ் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் கடந்த 2010-ம் ஆண்டு சுகாஷ், அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் சென்னையில் சேத்துப்பட்டு போலீசில் சிக்கினார். பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வங்கிகளில் கைவரிசை காட்டியுள்ளார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்லசிவம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சுகாஷ் என்பவர் ரூ.19 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாஷை தேடி வந்தனர்.விதிமுறைகளை மீறி கடன் கொடுத்ததாக வங்கியின் மேலாளர் ஜெகதீஸ் என்பவர் இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்டார். இதே போல சேலையூரில் உள்ள ஒரு வங்கியிலும் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார். இந்த 2 வழக்குகளில்தான் போலீசார் இவரை தேடி வந்தனர். கடந்த பல மாதங்களாக போலீசுக்கு தண்ணி காட்டி வரும் சுகாசை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.
அப்போது தான் அவருடன் அவரது காதலியான நடிகை லீனா மரியம்பாலும் சேர்ந்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. இதையடுத்து 2 பேரையும் பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கடந்த 28-ந் தேதி டெல்லியில் ஆடம்பர பங்களா ஒன்றில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி விளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதில் 2 கார்களில் போலியான நம்பர் பிளேட்டுகள் பொறுத்தப்பட்டிருந்தன.
லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் நேற்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார்.
பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
லீனாவுக்கு ஆங்கிலம், மலையாளம் மட்டுமே தெரியும். அவர் சுகாசுடன் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது பற்றி கூறியதாவது:-
கேரளாவில் பிறந்த எனக்கு சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 5 மலையாளப் படங்களில் நடித்தேன். சுகாஷ் கேரளாவில் தங்கி இருந்தபோது நான் நடித்த மலையாளப் படங்களை பார்த்துவிட்டு என்னை போனில் தொடர்பு கொண்டார். தான் ஒரு சினிமா டைரக்டர் என்று சொல்லி அடிக்கடி என்னிடம் பேசினார். தமிழ், இந்தியில் சினிமா முன்னணி பிரமுகர்களை தனக்கு தெரியும் என்று கூறினார். அவர்களிடம் எனக்கு சான்ஸ் வாங்கித் தருவதாக கூறினார். அதன்படி சென்னையில் முன்னணி டான்ஸ் மாஸ்டர் ஒருவரை சந்தித்தோம்.
அதன்பிறகு மும்பையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல டைரக்டரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். சுகாஷ் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடன் நெருங்கி பழகி காதலித்தேன். அவரைப்பற்றி விசாரித்த போது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் மகள் வழி பேரன் என்றும், அதே குடும்பத்தில் திருமணம் செய்யப்போகிறேன் என்றும் சொன்னார். இதனால் சுகாசுடன் நெருங்கிப்பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டேன்.
ஆனால் திருமணம் செய்ய வில்லை. ஒன்றாக வாழ்ந்து வந்தோம். 6 மாதத்துக்கு முன் டெல்லியில் பண்ணை வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி குடும்பம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து என்னை கைது செய்துவிட்டனர். அவர் சாதுர்யமாக தப்பிச்சென்று விட்டார்.இவ்வாறு லீனா கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆங்கிலத்தில் பேசுவதால் மெதுவாக ஒவ்வொன்றாக சொல்கிறார். இதனால் வாக்கு மூலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
டெல்லியில் கைது செய்யப்பட்டபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக நீதிபதியிடம் கூறியுள்ளார். அதனால் அவரை இங்குள்ள மருத்துவமனையில் பரிசோதிக்க உள்ளனர்.
நடிகை லீனா மரியா பால் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்
மோசடி செய்து தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைதான நடிகை லீனா மரிய பால் தாம்பரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இது குறித்து போலீஸார் தெரிவித்ததாவது...
சென்னை சேலையுரைச் சேர்ந்த ஸ்கைலார்க் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அவுட்பிட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சக்ரவர்த்தி என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் தான் 20.04.2012 அன்று 08431316706 என்ற நம்பரில் இருந்து கைபேசி அழைப்பில் பேசிய பெண் குரல், தனது பெயர் லீனா மரியா என்றும், தான் கர்நாடகா மாநிலத்தின் புராஜெக்ட் டெவலப்மென்ட் நிறுவனராக உள்ள ஜெயக்குமார் என்பவரின் தனி அலுவலர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கைபேசியை ஜெயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதில் பேசிய நபர் மனுதாரர் நடத்திவந்த ாஸ்கைலார்க் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அவுட்பிட்டர்ஸ்ா நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் மருத்துவ மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சீருடை தைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன் வகையில் ஜெயக்குமார் எனக் கருதப்படுகிற நபர் பதிவுக் கட்டணம் ரீபண்டபுள் கட்டணமாக ரூ.62,47,016டி- ஐ அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்த வைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய புகார்தாரரும் அவ்வாறே பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புகார்தாரர் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு கு.எண். 24டி2013 சடி.பி 406,419.420 இ.த.ச. மற்றும் 120(டி) இ.த.ச.வில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இதே நபர் ஜெயக்குமார் என தம்மை கனரா வங்கி, அம்பத்தூர் கிளையில் கம்பெனி பெயரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் பாலசுப்பரமணியன் மற்றும் அவரது மனைவி சித்ரா மேலும் அந்த வங்கியின் முதன்மை மேலாளர் ஜெகதீசா ஆகியோர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி வெண்டிங் மெஷின் சம்மந்தமான கர்நாடக அரசின் பல கோடி மதிப்பிலான ஆணை வாங்கித் தருவதாகக் கூறி 19.22 கோடி பெற்று ஏமாற்றியுள்ளார். இது சம்மந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கு.எண். 64டி13 சடிபி 170, 406, 409,419,420 473 ரூ 34 இ.த.ச. மற்றும் 66-ன் குற்றப்பிரிவு கீழ் 2008-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளி லீனா மரிய பால் சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்
08 Jul 2025சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
08 Jul 2025சென்னை : ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
-
அ.தி.மு.க.,வை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது: இ.பி.எஸ்.
08 Jul 2025கோவை : ''அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்ற நம்பிக்கையை நாம் பெற்று இருக்கிறோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.