முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்: விஜய் வழங்குகிறார்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.5 - 3,900 கம்ப்யூட்டர்களை நடிகர் விஜய் தனது பிறந்தநாளையொட்டி ஏழை, எளியவர்களுக்கு வழங்குகிறார். பொதுவாக ஒவ்வொரு மாட்டத்திலும் மாதந்தோறும் இயக்கத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய தலைவர்கள் ஏற்பாடு செய்யும் இலவச திருமணங்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் போன்ற நற்பணிகளில் கலந்து கொண்டு நம்மை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அதேபோல இந்த ஆண்டு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்யின் மக்கள் இயக்கத்தை சார்ந்த மாவட்ட நகர ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்ற 8-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஒரு மாபெரும் நற்பணி விழாவை ஏற்பாடு செய்திருக்கின்றனர். பல பின்னணி பாடகர்கள் பாட லஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் மக்கள் இயக்க தொண்டர்களும், ரசிகர்களும், தாய்மார்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவில் உயர்நீதிமன்ற பசுமை தீர்ப்பாய நீதியரசர் ஜோதிமணி கலந்து கொள்கிறார். தமிழ்நாடெங்கும் பசுமை புரட்சியை உண்டாக்கும் எண்ணத்தில் நீதிபதி ஜோதிமணி விழாவில் பங்குபெறும் அனைவருக்கும் தம் கரங்களால் மரக்கன்றுகள் வழங்கி விழாவை துவக்கி வைக்க இசைந்துள்ளார். அதைத்தொடர்ந்து விஜய் 3900 ஏழைகளுக்கு கம்ப்யூட்டர்களும், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், தையல் இயந்திரங்களும் மற்றும் பல்வேறு உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்ற இசைந்துள்ளார்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ராயல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். இந்த மாபெரும் நற்பணி விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் அத்தனை ரசிகர், ரசிகைகளும் இந்த விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடக்க ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அகில இந்திய  விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளரும், புதுவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புஸ்ஸிஆனந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். மாநில செயலாளர் ரவிராஜா, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மாநில துணைச்செயலாளர் ஏ.சி.குமார் மற்றும் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony