முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காளத்தில் 4-வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது:​

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மே - 2 - மேற்கு வங்காளத்தில்  4-வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதற்கான ஓட்டுப்பதிவு நாளை (3-ம் தேதி) நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல்கள் 6 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள நடந்து முடிந்துள்ளன. நான்காவது கட்ட தேர்தல் வருகிற 3 ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. ஹூப்ளி, கிழக்கு  மிதுனாப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தம் 63 தொகுதிகளுக்கு இந்த 4-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 288 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐந்தாவது கட்ட தேர்தல் வருகிற 7 ம் தேதியும், 6 வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் இம்மாதம் 10 ம் தேதியும் நடைபெற உள்ளன. வருகிற 13 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டு தீவிரவாதிகள் ஆதிக்கம் இருப்பதால் இம்மாநிலத்தில் பாதுகாப்பு கருதி 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் -திரிணாமுல் கூட்டணி மற்றொரு அணியாகவும், பாரதிய ஜனதா தனித்தும் போட்டியில் உள்ளன. இம்மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வரும் இடதுசாரி கூட்டணியை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் தனது கட்சி நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலையொட்டி பாதுகாப்பிற்காக மாநில போலீசாரும், 435 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்