முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 4 மே 2011      இந்தியா
Image Unavailable

 

இட்டாநகர்,மே.4 - அருணாசல பிரதேச முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் செயற்கை கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டு தபாங் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இட்டாநகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அதில் அவர் உட்பட 5 பேர் இருந்தனர். புறப்பட்ட 20 வது நிமிடத்தில் அது மாயமானது. அந்த இடம் மலைப்பாங்கானாது. அடர்த்தியான மரங்களை கொண்ட காட்டுப் பகுதியாகும். அடிக்கடி வானிலையும் மாறுவதால் ஹெலிகாப்டர் திசை தப்பியிருக்கும் என்று நம்பப்படுகிறது. 

இந்த சூழலில் அந்த ஹெலிகாப்டர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. ஆனால் அந்த இடத்தை துல்லியமாக அறிய முடியவில்லை. இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவின் உதவியுடன் அனுப்பப்பட்ட 2 செயற்கை கோள்கள் மூலம் அருணாசல பிரதேச முதல்வர் ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டது. மேலும் அப்பகுதிகள் படம் பிடிக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த போது மேற்கு காமங் என்ற இடத்தில் உலோக துண்டுகள் கிடப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த இடம் மிக அடர்ந்த காடுகளை கொண்டது. அதிக உயரத்தில் அமைந்துள்ளது. எனவே அப்பகுதியை நோக்கி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் பறந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்