எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,மே.4 - ஒசாமா பின்லேடன் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது குறித்து பாகிஸ்தான் அரசிடம் சொல்லாதது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பின்லேடன் 2005 ம் ஆண்டே பாகிஸ்தானின் உட்பகுதிக்குள் சென்று வந்ததை அமெரிக்க உளவுத் துறையினர் கண்டறிந்துள்ளனர். அவனுக்கு கடிதம் கொண்டு செல்லும் ஒற்றர் ஒருவரை தொடர்ந்து கண்காணித்துள்ளனர். ஆனால் 2009 ம் ஆண்டுதான் அந்த ஒற்றன் எங்கு செல்கிறார் என்பதை கண்டறிந்தனர். அதன்படி இஸ்லாமாபாத் அருகே உள்ள அபோதாபாத்திற்கு அவர் சென்று வருவதும் தெரியவந்தது. அபோதாபாத்தின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த மாளிகையில் பின்லேடனும், அவரது குடும்பத்தினரும் தங்கியிருப்பது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் உறுதி செய்யப்பட்டது.
பின்லேடனை உயிருடன் பிடிப்பதற்கு அமெரிக்கா ரகசியமாக திட்டம் தீட்டியது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா 5 முறை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி விவாதித்தார். ஏப்ரல் 29 ம் தேதி பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க ஒபாமா உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்க வீரர்கள் களத்தில் இறங்கினர். பாகிஸ்தானில் உள்ள ஹாஜி என்ற இடத்தில் விமானப்படை தளத்தில் இருந்துதான் 4 ஹெலிகாப்டர்களில் அமெரிக்க வீரர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த தகவல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடமோ அல்லது அரசிடமோ அமெரிக்கா தெரிவிக்கவில்லை.
இதற்கு காரணம், முன்கூட்டியே தெரிவித்தால் பின்லேடனுக்கு தகவல் பறந்து விடும் என்றும், அவன் தப்பி விடுவான் என்றும் அமெரிக்கா நம்பியது. இதற்கு ஏற்கனவே பல முன்னுதாரணங்கள் உள்ளன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை அமெரிக்க உளவுத் துறை கண்டறிந்து அதை பாகிஸ்தானுக்கு தெரிவித்து ராணுவ நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். ஆனால் பின்லேடனுடன் தொடர்புள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் முன்கூட்டியே தகவலை தெரிவித்து அவர்களை தப்பியோட செய்து விட்டனர். பின்னர் பெயரளவிற்கே பாகிஸ்தான் ராணுவம் அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பும். இவ்வாறு சூடு பட்டுக் கொண்ட அமெரிக்கா தற்போது விழித்துக் கொண்டது. எந்தவொரு தகவலையும் ராணுவத்திடமோ, அல்லது பாக். அரசிடமோ சொல்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது. அதன் பிறகுதான் ஏவுகணைகள் மூலம் போர் விமானங்களை அனுப்பி தாக்குதல்களை நடத்தி பல தலிபான் தீவிரவாதிகளை ஏற்கனவே அமெரிக்கா கொன்றுள்ளது. அந்த முறையில்தான் தற்போது பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க படைகள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


