முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகேனக்கல் அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

ஒகேனக்கல், ஜூன். 30 - காவிரியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக, ஒகேனக்கல் அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்வதாலும், கபிணி அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் பெரும் வேகத்தோடு தண்ணீர் விழுகிறது. அருவிப் பகுதிக்குள் நுழையும் படிக்கட்டுகள் வரை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. 

நேற்று வார விடுமுறை என்பதால் பயணிகள் குவிந்தனர்.  ஆனாலும் வெள்ளம் குறையாததால் 2 வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. அப்பகுதியில் பரிசல் போக்குவரத்திற்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. காவிரியில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்