எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.1 - உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி. சதாசிவம் நியமனம்: கருணாநிதி மற்றும் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் 60 ஆண்டு காலத்திற்கு பிறகு தமிழர் ஒருவர் உச்சநீதிமன்றத்தின் 40 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பதாக நேற்று அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ள செய்தியை தமிழர்களுக்கெல்லாம். தனிப் பொறும் மகிழ்ச்சியாகும். நீதியரசர் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
அவர் தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஜூலை திங்கள் 19ந் தேதி அன்று பொறுப்பேற்பது அறிந்த தமிழன் என்ற முறையில் அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்திய தலைமை நீதிபதி பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழர் நீதியரசர் சதாசிவம் தான் என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் ஒன்றாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இந்திய உச்சநீதிமன்றத்தின் நாற்பதாவது தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் பி. சதாசிவம் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.இந்திய தலைமை நீதிபதி பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழர் நீதியரசர் சதாசிவம் தான் என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் ்ரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ள கடப்பநல்லூர் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை அரசு பள்ளிக்கூடத்தில் தமிழ் வழியில் படித்தார். இவரது குடும்பத்தில் இவர் தான் முதல் பட்டதாரி; இவரது ஊரில் இவர் தான் முதல் வழக்கறிஞர். எந்த வசதியும் இல்லாத கிராமத்தில், எந்த பின்னணியும் இல்லாத குடும்பத்தில் பிறந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் இந்திய நீதித்துறையின் மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறியிருப்பது சமூக நீதிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும். தனியார் பள்ளிகளுக்கும், ஆங்கில வழி கல்விக்கும் தற்போது அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு பள்ளியில், தமிழ் வழியில் படித்த நீதியரசர் அவர்களின் முன்னேற்றம் தாய்மொழி வழிக் கல்வியின் வலிமையை உணர்த்துவதாக உள்ளது. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |