முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முகுல் வாஸ்னிக் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முகுல்வாஸினிக் ஆலோசனை நடத்தினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகுல் வாஸ்னிக் எம்.பி. இன்று சென்னை வந்தார். 

கட்சி தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தில் மாநில தலைவர் ஞானதேசிகன், மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன், அகில இந்திய செயலாளர்கள் சின்னாரெட்டி, சத்தீசன், திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லக்குமார், முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, எம்.பி.க்கள் மாணிக்தாகூர், சித்தன், ராமசுப்பு, எம்.எல்.ஏ.க்கள் ஜான் ஜேக்கப், விஜயதாரணி, ரங்கராஜன், முன்னாள் எம்.பி. ராணி, நாசே.ராமச்சந்திரன் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

வருகிற பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர் கொள்வது பற்றியும், யாருடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும் தற்போதைய கட்சியின் நிலைமை ஆகியவை பற்றியும் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டது. கூட்ட அரங்கில் பத்திரிகையாளர் உள்பட யாரையும் அனுமதிக்கவில்லை. புகைப்பட்ட அறையில் 2 மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு முகுல் வாஸ்னிக் இன்று புதுச்சேரி செல்கிறார். 

முன்னதாக சத்ய மூர்த்தி பவனில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, வசந்த குமார், மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, கோவிந்தசாமி, வெங்கட், முன்னாள் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் நாசே.ராஜேஷ், அனுராதா அபி, ஆதவன், நிலவன், கிஷோர்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்