எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.1 - ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 1993-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த தடை உத்தரவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. 2010-ம் ஆண்டு விடுதலைப்புலி அமைப்புக்கு தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது. இது சரிதானா? என்பது குறித்து ஆராய டெல்லி ஐகோர்ட்டின் அப்போதைய நீதிபதி விக்கிரமஜித் மாஜித்சென் தலைமையிலான தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
இவர்கள் டெல்லி, சென்னை, ஊட்டி கொடைக்கானல் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி கடந்த 2010 டிசம்பர் மாதம் விடுதலைப்புலி இயக்கத்துக்கு தடைவிதித்த உத்தரவு சரிதான் என்று தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வக்கீல் புகழேந்தி உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி எலிபி தர்மாராவ், நீதிபதி வேணுகோபால் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.
அதன்பின், 2012-ம் ஆண்டு இதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இந்த வழக்கில் நேற்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
விடுதலைப்புலி இயக்கத்துக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சட்டப்படி ஆலோசனை செய்து நீதிபதி விக்கிரம ஜித் மாஜித்சென் தலைமையிலான தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. இதில் சட்டமீறலோ விதி மீறலோ இல்லை. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்துதான் இறுதி தீர்ப்பை அளித்துள்ளனர். எனவே விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடைவிதித்தது செல்லும். இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு தீர்ப்பு கூறினர்.
இந்த வழக்கில் ஆஜராவதற்காக உயர்நீதிமன்றத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


