முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அ.தி.மு.க . ஆர்ப்பாட்டம்: அமைச்சர் அறிக்கை

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை 2  - மத்திய அரசை கண்டித்து மதுரையில் இன்று அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதில் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் அணி திரண்டு  வரவேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அழைப்புவிடுத்துள்ளார். இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான அம்மாவின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து மதுரையில் இன்று காலை10 மணி அளவில் மீனாட்சி பஜார் ஸ்காட் ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன் தலைமை தாங்குகிறார்.புறநகர் மாவட்ட அவைத்தலைவர் சி.துரைராஜ் முன்னிலை வகிக்கிறார்.

 அ.தி.மு.க சிறுபான்மையினர்  நல பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் சிறப்புரையாற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேயர் ராஜன்செல்லப்பா,புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் ஏ.கே.போஸ், மேலூர் ஆர்.சாமி,கே.தமிழரசன்,எம்,வி,கருப்பையா, துணை மேயர் கோபால கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தர்மராஜ், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள்,இன்னாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள்,மாநகராட்சி மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், பகுதி, தொகுதி, பாகம், வட்டம்,ஒன்றிய, நகர நிர்வாகிகள்,  பேரூர்,  ஊராட்சி,  கிளைக் கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள்,வீராங்கனைகள்,தொண்டர்கள்  பெரும் திரளாக வந்து கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

  என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி மேற்கொண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்