Idhayam Matrimony

தயாளு அம்மாளுக்கு டெல்லி ஐகோர்ட் கடும் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 3 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளிக்க வராமல் காலதாமதம் செய்வது ஏன்? உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவ சான்றிதழ் தராதது ஏன்? என்று கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விக் கணைகளை தொடுத்து தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. நாட்டையே உலுக்கிய ஊழல் என்றால் அது ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலாகத்தான் இருக்க முடியும். காரணம், இந்த முறைகேட்டில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை துறை குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கனிமொழி 7 மாதத்திற்கு மேலாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவோ ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வெளியே உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் ஜாமீனில் உள்ளனர். 

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட ராசா உள்ளிட்ட 17 பேர் மீது சில மாதங்களுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையின் போது ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கோர்ட்டில் ஆஜராகாமல் தயாளு அம்மாள் தட்டிக்கழித்து வந்தார். தனக்கு உடல் நிலை சரியில்லை என்று காரணத்தை கூறி அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனுவையும் மே மாதம் 31 ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டது. சி.பி.ஐ. கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாளு அம்மாள் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது தயாளு அம்மாளின் மனு ஏற்கத்தக்கதல்ல என சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவ சான்றிதழ் அளிக்காதது ஏன்? என்றும், சாட்சியம் அளிக்க வராமல் தாமதம் செய்வது ஏன் என்றும் தயாளு அம்மாளுக்கு சரமாரி கேள்விகளை தொடுத்ததோடு அவருக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago