முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி சதாசிவத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு ஏற்கும் நீதிபதி சதாசிவத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை வருமாறு:- தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர்  சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டுள்ளார்  என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். 

 ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, பின்னர் சென்னை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று அரசு வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர் என படிப்படியாக ஏற்றம் பெற்று இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்  சதாசிவம். 

இவர் காட்சிக்கு எளியவர்; எவரிடமும் கடுஞ்சொல்  கூறாதவர்; எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர்;  தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். தன்னுடைய நேர்மை, திறமை ஆகியவற்றால் நீதித் துறையின் மிக உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக  பொறுப்பேற்க உள்ள நீதியரசர் சதாசிவம் அவர்களுக்கு  தமிழக மக்களின்  சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.  அவர் பணிக் காலத்தில் நீதித்துறைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்ற அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்