முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டில் அழகிரியிடம் குறுக்கு விசாரணை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் அந்தத் தொகுதியின் எம்.பி.யான மு.க.அழகிரியிடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதி தி.மு.க. வேட்பாளராக மு.க.அழகிரி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.மோகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே மோகன் காலமானதால், அவர் சார்பில் அவரது தேர்தல் முகவரான ஏ.லாசர் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து மு.க.அழகிரி ஏற்கெனவே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். 

இதனையடுத்து தற்போது அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது. கடந்த வாரம் புதன்கிழமை அழகிரியிடம் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எம்.எஸ்.கிருஷ்ணன், மு.க.அழகிரியிடம் இரண்டாவது நாளாக குறுக்கு விசாரணை மேற்கொண்டார். பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கிய குறுக்கு விசாரணை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு இம்மாதம் 4ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்