முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - மாஜிஸ்தரேட் மற்றும் வக்கீல்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வக்கீல்கள் கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்தில், குன்னூர் மாஜிஸ் திரேட் மற்றும் வக்கீல்களை சட்டவிரோதமாக கைது செய்துவரும் போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். போலீசாரின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து நேற்று அனைத்து நீதிமன்றங்களிலும் புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொய் வழக்கு அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள வக்கீல்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் பெண் வக்கீல்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம், தலைவர் டி.பிரசன்னா, தலைமையில் நடந்தது. போலீசாரின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து 2ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றங்கள், சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றங்களில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். தீர்ப்பாயங்கள், நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் நேற்று ஆஜராகவில்லை.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஒரு சில நிமிடங்கள் ஒரு சில நிமிடங்கள் அமர்ந்துவிட்டு அவர்களின் அறைகளுக்கு சென்றுவிட்டனர். வக்கீல்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்றங்களில் வழக்கு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்