முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டம்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.5 - எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வியாண்டில் உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் என்னும் 2 புதிய பாடத்திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதில் படிப்பதற்காக மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும்  15-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  செய்தி மக்கள் தொடர்புக் இயக்குனர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை-600 113.

திரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக, சென்னை தரமணியில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் சிறப்புடன் இயங்கி வருகின்றது.

இந்தியாவிலேயே முதல் முறையாக திரைத்துறையின் மாற்றத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயிற்றுவிக்கும் விதமாக,  இந்நிறுவனத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து (2013 -2014 ) உயிர்ப்பூட்டல்  மற்றும் காட்சிப்பயன்  எனும் இரண்டு பாடத்திட்டங்கள் துவங்கப்படவுள்ளன.  

மேற்குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் சேர்ந்து, கலைத்துறையில் தங்களின் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவ/மாணவியர், இதற்கான விண்ணப்பப் படிவங்களை,     

05.06.2013 நாளிட்ட நாளிதழ்களில் வெளிவரும் விளம்பரங்களைப் பார்த்தும்  தமிழக அரசின் "www.tn.gov.in" என்ற இணையதள முகவரியில் இருந்து படியிறக்கம் செய்தும்  விண்ணப்பிக்கலாம். 

உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்  எனும் இரண்டு பாடத்திட்டங்களுக்கு மாணவ/மாணவியர் சேர்ந்து பயில்வதற்கான காலஅவகாசம் 15.07.2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  எனவே, மாணவ/மாணவியர்களின் நலன் கருதி, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி இந்த புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயிலவிரும்புவோர் 15.07.2013-க்குள்ளாக விண்ணப்பிக்கலாம். 

இவ்வாறு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago