எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.5 - ஆளுநர் ரோசய்யா தனது 80-வது பிறந்த நாளை ராஜ்பவனில் நேற்று கொண்டாடினார். அப்போது அவருக்கு தனது வாழ்த்துக்களை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்று (4.7.2013), தமிழ்நாடு ஆளுநர் முனைவர் கே.ரோசய்யாவின் 80-வது பிறந்த நாளையொட்டி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள். அதில்:-
``தங்களின் 80-வது பிறந்தநாளான இன்று என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்'' என்று முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (4.7.2013) தமிழ்நாடு ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றியினை தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துக் கொண்டார்கள்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


