எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.6 - ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை நேற்று அமலானது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வாரம் மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும். அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள் தற்போது வாரத்தில் 6 நாட்கள் செயல்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு சிரமமாக இருந்தது. பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ரேஷன் பொருட்கள் அவர்கள் வாங்குவதற்கு வசதியாக ரேஷன் கடை விடுமுறையை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்தது. மேலும் அதே நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தங்களுக்கு வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனால் மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும் அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்த புதிய நடைமுறை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்தது. இன்று (5-ந்தேதி) மற்றும் 12-ந்தேதி ரேஷன் கடைகள் மூடப்படும். அதற்கு பதிலாக 14-ந்தேதி மற்றும் 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை மலிவு விலை காய்கறிகடைகளுக்கு பொருந்தும். கூட்டுறவு சங்கம் மூலம் தான் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மலிவு விலை காய்கறி கடைகள் நடத்தப்படுகின்றன. அதனால் இன்று கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


