எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜூலை. 6 - பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சென்ற பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரை 2011 ம் ஆண்டு அக்டோபர் 28 ல் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்வதாக இருந்தது. அப்போது திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பாலத்தின் அடியில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இதில் தலைமறைவாக இருக்கும் பக்ருதீன், பிலால் மாலிக், முகமது ஹனிபா உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண்:1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


