முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசன் தற்கொலை: மாவட்டம் முழுவதும் போலீசார் குவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி. ஜூலை 6  -  தமிழகத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய காதல் கலப்புத் திருமணம் செய்த இளவரசன் நேற்று முன்தினம் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து தருமபுரி மாவட்டம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் திவ்யா. 

இவருக்கும், நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இளவரசனை திருமணம் செய்து கொள்ள திவ்யாவின் தந்தை நாகராஜ்  உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து திவ்யாவின் அப்பா நாகராஜ் திடீரென தற்கொலை செய்து கொண்டார். 

 இவரது தற்கொலைக்கு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என 

கூறியதால் இரு சமூகத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த நவம்பர் மாதம் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இது சம்மந்தமாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, இதற்கான விசாரணை இன்று வரை நடைபெற்று வருகிறது. 

 இந்நிலையில் கடந்த மாதம் திவ்யா உடல்நிலை சரியில்லாத தனது தாயாரைப் பார்த்துவிட்டு 

வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் இளவரசனின்  வீட்டுக்கு  திரும்பவில்லை. இதையடுத்து அவர் எங்கு இருக்கிறார் என்ற விபரம் தெரியாததால், திவ்யாவின் தாயார் சென்னை உயர்nullதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

 மனு விசாரணைக்கு வந்த போது, திவ்யா அவரது தாயாருடன் கோர்ட்டில் ஆஜராகி தற்போது 

தனது மனநிலை சரியில்லாததாலும், உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை கவனிக்க 

வேண்டியிருப்பதாலும் தனது தாயாருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து, அவரது 

தாயாருடன் செல்ல nullகோர்ட் அனுமதி அளித்தது. 

 கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோர்ட்டில் ஆஜரான 

திவ்யா இளவரசனுடன் சேர்ந்து இனி வாழ விரும்பில்லை எனவும், தனது தாயாருடனே இருக்க 

விரும்புவதாகவும் தெரிவித்ததை அடுத்தும், திவ்யாவின் தாயார் ஆள்கொணர்வு மனுவை வாபஸ் 

பெற்றுக் கொண்டதை அடுத்தும், இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 

 இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே 

தண்டவாளத்தில் இளவரசன் இறந்து கிடந்தார். போலீசார் இறந்து கிடந்த இளவரசனின் உடலை nullண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி 

மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைத்தனர். 

 நேற்று காலை இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு 

கூடியிருந்த இளவரசன் உறவினர்கள் பிரேதப் பரிசோதனையை நடத்தக்கூடாது எனவும், 

வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவர்களை அழைக்க வேண்டும் எனவும், அல்லது வேறு மாவட்ட மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும் எனவும், பிரேதப் பரிசோதனையை வீடியோ படம் பிடிக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனை அறிக்கையை தங்களிடம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதால் கோவை  மண்டல ஐஜி டேவிட்சன் தேவாசிர்வாதம், சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமார், எஸ்பி​க்கள் ஆஸ்ரா கார்க், செந்தில்குமார், சக்திவேல் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.  மேலும் சென்னை உயர்nullதிமன்றத்தில் இளவரசன் இறப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த nullகோர்ட்பிரேதப் பரிசோதனையை நடத்தி அதன் வீடியோ, அறிக்கையை இளவரசன் அப்பாவிடம் தரவேண்டும் என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 

மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யலாம் எனவும், அதுவரை இளவரசன் உடல் தருமபுரியில் 

மருத்துவமனையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது. 

 இந்த உத்தரவை போலீஸ் அதிகாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்ததுடன், 

அனைவரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல 

தனியாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 

மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் 

சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் தருமபுரி நகரம், செல்லன்கொட்டாய், நாயக்கன்கொட்டாய், 

அண்ணாநகர், கொண்டம்பட்டி, நத்தம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக ரோந்துப்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்