முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு குடிநீர் விநியோகிக்க முதல்வர் நடவடிக்கை

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

பெரியபாளையம், ஜூலை.7 - தமிழக எல்லையில் நேற்று மாலை மூன்று அமைச்சர்கள் மலர் துாவி வரவேற்றனர். தமிழக முதல்வராக பதவி வகித்த எம்.ஜி.ஆர்,ஆந்திர முதல்வர் பதவி வகித்த என்.டி.ராமாராவ் ஆகியோர் 1983-ம் ஆண்டு தெலுங்கு கங்கை திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். இதன்படி சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாய்ன்ட் வரையில் 152.700 கிலோ மீட்டர் துாரம் கால்வாய் அமைக்கப்பட்டது.இப்பணி 1996-ம் ஆண்டு நிறைவடைந்தது.

  இந்த திட்டத்தின்படி ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 4 டி.எம்.சி தண்ணீரும், ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி தண்ணீரும் இந்த கிருஷ்ணா கால்வாய் வழியாக ஆந்திர மாநில அரசு தமிழகத்துக்கு திறந்து விட ஒப்புதல் வழங்கியது.

  இவ்வாறு கண்டலேறு அணையில் இருந்து 152.700 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லைக்கு வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 25 கிலோ மீட்டர் துாரம் வரை கால்வாய் வழியாக புண்ைடி எரிக்கு கொண்டு சென்று தேக்கி வைப்பர். பின்னர், அங்கிருந்து 48 கிலோ மீட்டர் துாரம் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு இந்த தண்ணீரை கொண்டு செல்கின்றனர்.

  பின்னர் அங்கிருந்து சென்னை மக்களின்குடிநீர் தேவைக்கு சப்ளை செய்யப்படுகிறது.இந்நிலையில், ஆந்திர மாநிலம் உப்பலமடுகு என்ற இடத்தில் உள்ள அணைக்கட்டு கடந்த வருட வெள்ளப்பெருக்கில் உடைந்து விட்டது.இதனை அந்த மாநில அரசு சுமார் ரூ.10 கோடியில் சீரமைத்து வருகிறது.

  இதனால் தமிழகத்துக்கு இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கும் பணி பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் உப்பலமடுகு என்ற இடத்தில் இருப்பு பைப் அமைத்து ஒரு மாத காலம் தாமதமாக ஜுலை 1-ந் தேதி மாலை 4மணிக்கு  தமிழகத்துக்கு தெலுங்கு கங்கை திட்டத்தின் ஒப்பந்தின்படியும்,தமிழக முதல்வரின் வேண்டுகோலின் படியும் 17-வது முறையாக ஆந்திர மாநில அரசு முதல் கட்டமாக 200 கன அடி தண்ணீர் திறந்து விட்டது.

  பின்னர் படிபடியாக 500 கன அடி தண்ணீர் திறந்து விட்டது.இந்த தண்ணீர் நேற்று மாலை தமிழக எல்லையான தாமரைகுப்பம் ஜீரோ பாய்ன்டுக்கு வந்து சேர்ந்தது.இதனை தமிழக அமைச்சர்கள் பால்வளத்துறை  மாதவரம்மூர்த்தி,வணிகவரித்துறை அமைச்சர் ரமணா, பிற்படுத்பட்டோர் துறை அமைச்சர் அப்துல்ரஹீம்,திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா,பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் மலர் துாவி வரவேற்றனர். 

  இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ்,ஆர்.டி.ஒ.அபிராமி,திருவள்;ர் நகர்மன்ற தலைவர் கமான்டோ பாஸ்கர்,எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் அம்மினிமகேந்திரன், ஊத்துக்கோட்டை பேரூராட்சிதலைவர் பத்மாவதிராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  மேலும்,சென்னை நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஏமராஜ்,செயற்பொறியாளர் மாதவன்,உதவி செயற்பொறியாளர் ரவிசுப்பிரமணியம்,உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் ஆந்திர மாநில என்.டி.ஆர் தெலுங்கு கங்கை திட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்