முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி மரணமடைந்த பெண் குடும்பத்திற்கு நிதி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர்    ஜெயலலிதா வெளியிட்டுள்ள வின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யார் வட்டம்,  மேநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  செல்வராஞு என்பவரின் மகள்  கலைச்செல்வி,  29.6.2013 அன்று பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

மின்சாரம் தாக்கி அகால மரணமடைந்த  மாணவி கலைச்செல்வியின் குடும்பத்திற்கு  எனது ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி கலைச்செல்வியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago