முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - தமிழ்நாட்டில் தொடர்ந்து இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை, காரணமாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஆனால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் போதிய மழை இல்லாமல் வறண்ட வானிலை காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் வட மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.

நேற்று முன்தினம் தாம்பரத்தில் 40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. காஞ்சீபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்தர மேரூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் உட்பட பல பகுதிகளில் கடந்த சனி, ஞாயிறுகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. பகலில் வாகனம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

இதே போல் நேற்றிரவு சென்னை, திருவள்ளுார், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதில் நுங்கம்பாக்கத்தில் 22.2 மி.மீட்டர் மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 4.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெய்தது. 

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், ''தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்கிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்'' என்றார்.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் அதிகபட்சமாக திருவாரூரில் 4 செ.மீ. செங்கல்பட்டு, காவேரிப்பாக்கம், காரைக்கால், நாகை, நீடாமங்கலம், பாபநாசத்தில் 3 செ.மீ. மழையும், சென்னை மாவட்டத்தில் 2 செ.மீ. மழையும், கும்பகோணம், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், எண்ணூரில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago