எடியூரப்பா அரசுக்கு எதிராக பேரணி - குமாரசாமி

Kumaraswamy

 

பெங்களூர், மே 6 - கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்தப்போவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவரது ஆட்சியில் பெரும் ஊழல்கள் நடந்து வருவதாகவும் இந்த ஊழலுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்தப்போவதாகவும் எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி நேற்று பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், முதல்வர் எடியூரப்பா ஆட்சியில் கல்வி உள்ளிட்ட எந்த வளர்ச்சிப்பணிகளும் நடக்கவில்லை என்றார்.

வளர்ச்சிப் பணிகளுக்கு பதிலாக எடியூரப்பா ஆட்சியில் ஊழல்கள்தான் மலிந்து கிடக்கின்றன  என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறிய அவர், பல துறைகளிலும் ஊழல்கள் நடந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்த  ஊழல் ஆட்சிக்கு எதிராக கர்நாடகத்தில் விரைவில் மாபெரும் பேரணி நடத்த தனது கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பேரணியின்போது எடியூரப்பா ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

எடியூரப்பாவின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச்செல்லவே இந்த பேரணியை நடத்தப் போவதாகவும் இந்த பேரணியில் ஊழலுக்கு எதிரானவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ