தி.மு.க.வுடனான கூட்டணி முறியுமா? குலாம் நபி பேட்டி

Ghulam nabi Azad1

 

புதுடெல்லி,மே.7 - தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே நல்ல உறவு நீடிக்கிறது. இரண்டு கட்சிகளிடையே கூட்டணி பலமாக இருக்கிறது. இந்த கூட்டணி தொடரும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறினார். மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க.-காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்படி இருந்தும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதனையொட்டி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார்.

இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே உள்ள கூட்டணி முறியும் என்று பேச்சு அடிபடுகிறது. இந்தநிலையில் தமிழக அரசியல் விவகாரத்தை கவனிக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே கூட்டணி முறியுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஆசாத், தி.மு.க.-காங்கிரஸ் இடையே நல்ல உறவு இருக்கிறது. இருகட்சிகளிடையே கூட்டணி பலமாக இருக்கிறது. இந்த கூட்டணி தொடரும் என்றார். ஒருவேளை கனிமொழி கைது செய்யப்பட்டால் இரண்டு கட்சிகளுக்கிடையே உள்ள உறவில் பாதிப்பு ஏற்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கும் மேற்கண்டவாறே ஆசாத் பதில் அளித்தார். 

சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி நேற்று ஆஜரானார். மேலும் முன்ஜாமீன் மனுவையும் அப்போது கனிமொழி தாக்கல் செய்தார். அதனால் ஒருவேளை கனிமொழி தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ