முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுருளி சாரல் திருவிழா: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

தேனி, ஆக.11 - மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சுருளி அருவி சாரல் திருவிழாவை துவக்கிவைத்து பேசுகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த நிதியாண்டில் சுமார் ரூபாய் 154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவி தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில்  பிரசித்துப்பெற்ற ஸ்தலமாகும் இவ்வருவிக்கு மிக பழமையான வரலாற்றுச் சிறப்பு உண்டு. இங்கு சித்தர்களும் யோகிகளும் வந்துசென்ற சிறப்பு வாய்ந்த இடமாகும். தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களான கும்பக்கரை அருவி, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற வகையில் புங்ைகாக்களை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு செல்லப்படும். 

        மேலும் மேகமலைக்குச் செல்லுகின்ற தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்காக ரூபாய் 90 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 அரசு கலைக்கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் 11 தொழில்நுட்ப கல்லூரிகளையும் அமைக்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த வாரம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேக்கம்பட்டியில் புதிதாக தொழில்நுட்ப கல்லுரியில் வகுப்புகள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஐந்து அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தினை அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள் அவற்றில் போடிநாயக்கனுனூர் ஒன்றாகும். தேனி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக 1500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டையினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் தமிழக அரசு மேற்கொள்கின்ற அணைத்து வளர்ச்சிப்பணிகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

       சுருளி அருவி சாரல் திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் பிற துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் திறந்துவைத்து பேசியபோது தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்துத்துறை வளர்ச்சிகளிலும்  இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை  மாநிலமாக மாற்றுவதற்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் மக்களை கவருகின்ற வகையில் ம்ேபடுத்துவதற்காக போதிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சுற்றுலா விழாக்களை அந்த மாவட்டத்திற்கு தகுந்தாற்போல் நடத்திட ஆணை பிறப்பித்துள்ளார்கள். அந்;த அடிப்படையில் இன்றைய தினம் தேனி மாவட்டம் சுருளி சாரல் திருவிழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா விழாக்களை நடத்துவதற்கு காரணம் கண்ணிற்கு குளுமையினையும், இதயத்திற்கு இனிமையினையும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலா விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாண்டில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அதேபோன்று குற்றாலம், ஓகேனிக்கல் மற்றும் சுருளி அருவியில் அதிகமான நீர் கொட்டுவதால் அவற்றில் நீராடுவதற்காக ஆயிரக்கனக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். 

 

      தேனி மாவட்டம் அதிகப்படியான சுற்றலா பயனிகளை கவருகின்ற வகையில், கும்பக்கரை அருவி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை ஆகிய ஸதலங்கள் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான சுற்றுலா பயனிகள் வருகை தருவதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களது கோர்யீக்கையினை அறிக்கையாக பெற்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கருத்துரு தயாரித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டுசென்று சுற்றுலா ஸ்தலங்களில் அடிப்படை தேவைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றைய விழாவில் அனைத்துத்துறைகளின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு கண்கவர் காட்சிகளை அமைத்துள்ளார்கள். குறிப்பாக தோட்டாக்கலைத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்பட்ட கர்னல் பென்னிகுவிக் மணிமண்டபத்தின் மாதிரியை காய்கறிகளைக் கொண்டு நேர்த்தியாக அலங்கரித்துள்ளார்கள.; அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

 

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவீண்குமார் அபினபு, இ.கா.ப. அவர்கள், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.லாசர் அவர்கள், கம்பம் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.தங்க முருகன் அவர்கள், சுருளிபட்டி ஊராட்சிமன்றத்தலைவர் திரு.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.முருகேசன் அவர்கள், கம்பம் நகர்மன்றத்தலைவர் திரு. சிவக்குமார் அவர்கள்,; மேகமலை வன உயிரின காப்பாளர் திரு.வெங்கிடசாமி அவர்கள், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிவ.ஜானகி அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மகாலிங்கம் அவர்கள், துணைத்தலைவர் திரு.ஆண்டி அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எம்.ஆர்.்ஸ்வரன் அவர்கள், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமதி.்ஸ்வரி பாலன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.என்.ரமேஷ், வட்டாட்சியர் திரு.தனலிங்கம் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜீவரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஜெ.விஜயாராணி அவர்கள வரவேற்புரையாற்றினார், சுற்றுலா அலுவலர் திரு.குணசேகரன் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago