முக்கிய செய்திகள்

திருப்பதி கோவிலில் தங்க நகைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      ஆன்மிகம்
thirupathi

 

திருப்பதி, பிப்.23 - திருப்பதி கோவிலில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் பணம் உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பல வசதியான பக்தர்கள் தங்கத்தால் ஆன ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதுவரை இவ்வாறு காணிக்கையாக செலுத்திய ஆபரணங்களின் எடை 20 டன்னுக்கும் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதிலுள்ள நகைகளில் பல நகைகளை சுவாமிக்கும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று அணிவிக்கின்றனர். திருவிழா போன்ற முக்கிய காலங்களில் சுவாமிக்கு பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. இவ்வாறு சுவாமியின் நகைகள் அடிக்கடி கையாளப்படுவதால் நகைகளின் இருப்பை ஆண்டுதோறும் கணக்கிட்டு தணிக்கை செய்துவருகின்றனர். இந்த பணி 40 நாட்களுக்கு தொடரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் கோவில் நிர்வாகக் குழு ஒரு புதிய உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. அதன்படி சுவாமிக்கு தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள் தங்கள் காணிக்கை பொருள் குறித்து முன்கூட்டியே விளக்கம் அளித்து காணிக்கைக்கான அனுமதி பெறவேண்டும். அனுமதி பெறாமல் வரும் ஆபரணங்களை ஏற்க முடியாது. அனுமதி இல்லாத ஆபரணங்களை வேண்டுமானால் பக்தர்கள் பொது உண்டியலில் போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் தங்க நகைகளை பாதுகாக்கும் நோக்குடனேயே இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: