முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் - தங்கபாலு தடாலடி

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.11 - கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஜி.ஏ.வடிவேலு, இதயாதுல்லா உட்பட காங்கிரஸ் சீரமைப்பு குழுவை சேர்ந்த 5 பேரை தங்கபாலு நீக்கியுள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:- சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிகளை தேர்வு செய்ததில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.   மயிலாப்ர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டதும் காங்கிரசார் கொந்தளித்தனர். தங்கபாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜெயந்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு மாற்று வேட்பாளராக மனு செய்த தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளரானார். திட்டமிட்டே மனைவியின் மனுவை சரியாக ர்த்தி செய்யாமல் தங்கபாலு கட்சி தலைமைக்கே டிமிக்கி கொடுத்து வேட்பாளராகி விட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள். 

தங்கபாலு பதவி விலக கோரி சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்தனர். மாநிலம் முழுவதும் உருவ பொம்மை எரிப்பு போராட்டங்கள் நடந்தது. அதையெல்லாம் சட்டை செய்யாமல் தேர்தல் களத்தை தங்கபாலு சந்தித்தார். கணவரும்​மனைவியுமாக தேர்தல் களத்தில் வலம் வந்தனர். மனதுக்குள் குமுறினாலும் கட்சி கட்டுப்பாடு என்ற ஒரே நோக்கத்துக்காக கட்சி தொண்டர்களும் தேர்தல் பணியாற்றினார்கள். வாக்குப்பதிவு முடிந்த அன்று இரவே முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 19 பேரை திடீரென கட்சியில் இருந்து க்கி உத்தரவிட்டார். 

மீண்டும் தங்கபாலு எதிர்ப்பு பொறி பற்றி எரிந்தது. இளைஞர் காங்கிரசாரை nullக்க தங்கபாலுக்கு தகுதி இல்லை என்று டெல்லி மேலிடத்துக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து டெல்லியில் இருந்து விசாரணை குழு நேரில் சென்னை வந்து விசாரித்து சென்றது. இது தொடர்பான அறிக்கையையும் டெல்லி மேலிடத்தில் தாக்கல் செய்தனர்.டெல்லி மேலிட தலைவர்கள் சிலரை கைக்குள் போட்டு கொண்டு தங்கபாலு மனம் போல் செயல் படுவதாக தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களும் குறை கூறினார்கள். இதை தொடர்ந்து ஜி.ஏ. வடிவேலு தலைமையில் காங்கிரஸ் சீரமைப்பு குழு உருவாக்கப்பட்டது. 

இந்த குழுவினர் தனியாக கூட்டம் நடத்தி தங்கபாலுவை கடுமையாக விமர்சித்தனர். குலாம்நபி ஆசாத், வயலார் ரவி ஆகியோரை தமிழக கட்சி பொறுப்பில் இருந்து nullக்கவும் தங்க பாலுவை தலைவர் பதவியில் இருந்து க்கவும் வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிடம் முறையிட்டனர். இதனால் கோபம் அடைந்த தங்கபாலு மீண்டும் தடாலடி நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சி கட்டுப் பாட்டை மீறியதாக ஜி.ஏ. வடிவேலு, இதயத்துல்லா, மயிலை பெரியசாமி, ராமலிங்க ஜோதி, எம்.எஸ்.திரவியம் ஆகிய 5 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார்.  

 தங்கபாலுவின் இந்த நடவடிக்கைகள் மீண்டும் காங்கிரஸ் வட்டாரத்தில் ஆவேசத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜி.ஏ.வடிவேலு, இதயத் துல்லா உள்பட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஏ.கே.அந்தோணி, மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி ஆகியோரை சந்தித்தனர். இன்று அல்லது நாளைக்குள் ராகுல்காந்தி மற்றும் சோனியாவை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் இதயத்துல்லா வழக்கு தொடர போவதாக தங்கபாலுவுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony