முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறாக பேசிய வழக்கு: தஞ்சை கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

தஞ்சை,செப்-19 - தஞ்சை நகரில் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அக்கட்சித்தலைவர் நடிகர் வி​ஜயகாந்தத் பிறந்தத நாள் விழா கடந்த 2012 ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் குப்புசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒரேஒரு முறை விஜயகாந்த் நேரில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து அடுத்த மூன்றுமுறை நேரில் ஆஜராகவில்லை. 

இதையடுத்து இவ்வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்காக வந்தது. அப்போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதையொட்டி nullதிபதி சேதுமாதவன் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டார். அதன்பின்பு விஜயகாந்த சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் கடந்த 12ம் தேதி கோர்ட்டில் விஜயகாந்த் வரும் 18ம் தேதி (நேற்று) ஆஜராவார் என பதில் மனு தாக்கல் செய்தனர். இதனால் nullதிபதி பிடிவாரண்ட் உத்திரவை தகர்க்க வேண்டுமென வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். நேற்று nullதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராக வேண்டுமென்று உத்திரவிட்டிருந்தார்.

நேற்றுகாலை விஜயகாந்த் தஞ்சை மாவட்ட அமர்வு nullதிமன்றத்தில் காலை 10.25மணிக்கு நேரில் ஆஜரானார். அப்போது nullதிபதி வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதன்பின்பு விஜயகாந்த் கோர்ட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago