முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுக்குமாடி கட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.20 - சென்னையில் கட்டப்பட்டுவரும் 12 ஆயிரம் அடுக்குமாடி கட்டப்பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளை அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவித்தினார்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.வைத்திலிங்கம்  தலைமையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியக் கூட்ட அறையில் வாரியத்தின் பணிகள் குறித்து  வாரியத் தலைவர் கு.தங்கமுத்து, தங்ககலிய பெருமாள், அரசு செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை,  மேலாண்மை இயக்குநர் ஏ.சந்திரசேகரன்,  தலைமைப் பொறியாளர் சு. ஜெயபால், வாரிய செயலர் சு.பரமசிவம் மற்றும்  உயர் அதிகாரிகளுடனும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகளுடனும் ஆய்வு செய்தார்கள். கீழே கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

1) நந்தனம் அடுக்குமாடி வணிக மற்றும் அலுவலக வளாகம் திட்ட பணிகளை தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

2) ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கம் (மின் தூக்கி வசதியுடன்) மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம்  திட்டப்பகுதிகளில் ரூ.540 கோடி செலவில் கட்டி  முடிக்கப்பட்டு வரும் 12000 அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கட்டிட பணிகளை விரைந்து முடித்திடவும்,  பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார். 

மேலும், குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை  வசதிகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் மற்றும் மின் இணைப்பு போன்றவற்றின் பணிகள் குறித்து இஙரநநஆ  ேபசஉஆ அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிந்திட அறிவுறுத்தினார். 

இத்திட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு சாலை வசதிகளை விரைந்து முடிந்திட அறிவுறுத்தினார். 

3) பதிமூன்றாவது நிதிக் குழு திட்டத்தின் கீழ் சென்னை, திருச்சி,மதுரை, கோவை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் 5243 குடியிருப்புகள் கட்டும் பணிகளையும் விரைந்து முடிந்திட  அறிவுறுத்தினார்.

4) அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பகுதிகளான நொச்சி நகர் மற்றும் துரைப்பாக்கம் திட்டப்பகுதிகளில் பயனாளிகளுக்கு விரைவில் ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

5) பொறியாளர், இளநிலை உதவியாளர், பண வசலாளர் மற்றும் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தகுதியான நபர்களை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

6) வாரியத்திற்கு நிலமாற்றம் செய்யப்பட்டுள்ள திட்டப்பகுதிகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு உடனடியாக விற்பனைப் பத்திரம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago