முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.19 - இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா விழாவைத் தொடங்கி வைக்கிறார். இதில் கவர்னர் ரோசைய்யாவும் கலந்து கொள்கிறார்.

இந்த நூற்றாண்டு விழாவிற்காக முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசின் சார்பாக ரூபாய் 10 கோடி நிதி உதவி அளித்துள்ளார். இந்த விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இது குறித்து ஏற்கனவேதென்னிந்திய திரைப்பட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்., வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய நூற்றாண்டு சினிமா விழாவையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.10 கோடி நிதி உதவி வழங்கினார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் செப்டம்பர் 21 (இன்று) முதல் வரும் 24 வரை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் தமிழக மக்களை வழி நடத்திச்செல்லும் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வது தென்னக திரையுலகிற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.

21-ம் தேதி காலை மலையாளத் திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் நடத்தப்போகும் கலைநிகழ்ச்சி 4 மணி நேரம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணி நேரம் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

2-ம் தேதி காலை கன்னடத் திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள் நடத்தப்போகும் கலைநிகழ்ச்சியும், அன்றையதினம் மாலை தெலுங்கு மொழி கலைஞர்கள், நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் 4 மணி நேரம் நடைபெறும்.

23-ந் தேதி மாலை இந்திய சினிமா நூற்றாண்டை யொட்டி 100 கிலோ கேக் வெட்டிகிறோம்.  மொழி கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இனிய விருந்து நடைபெறும். தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் ஒன்று சேரும் குடும்ப விழா, விழாவின் நிறைவு நாளான 24-ந் தேதி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆந்திரம், கேரளா, கர்நாடக முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் அனைத்து மொழி திரைப்பட சாதனையாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

இந்த விழாவில் கலந்து கொள்ளவும் நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மற்றும் பங்களிப்புகளுக்காகவும் நான்கு மொழி கலைஞர்கள், நடிகர்கள், சாதனையாளர்கள் சென்னையில் சக்கமிக்க வேண்டும். இதற்காக தென்னிந்திய திரைப்படத்துறையின் அனைத்து சங்கங்களும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது அபிராமி ராமநான், பன்னீர்செல்வம், கலைபுலி உடன் இருந்தனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony