முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேமானந்தா ஆசிரமத்தில் வெளிநாட்டு மாணவர் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

புதுக்கோட்டை, செப். 25 - புதுக்கோட்டை மாவட்டம் பாத்திமா நகரில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் 2 ம் ஆண்டு படித்து வந்த பெல்ஜியத்தை சேர்ந்த பார்டர் கியுலான் என்பவரின் மகன் மார்லின் கிபுலான். இவர் பாத்திமா நகரில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆசிரமத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விராலிமலை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாணவர் ஏன் ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு நடந்தது என்ன என்பது உடனடியாக ஏதும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony