முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதாரமற்ற 100 கிலோ இறைச்சி- புகையிலை பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 27 - சென்னை அண்ணா நகர் பகுதியில் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். 100 கிலோ சுகாதாரமற்ற  இறைச்சி பறிமுதல் செய்து புதைக்கப்பட்டது. சுகாதாரமற்ற  உணவு பொருட்கள், குளிர் பானங்கள், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி,  சென்னை மாநகராட்சி மேயர்  சைதை துரைசாமி மற்றும் முதன்மைச் செயலாளர்- ஆணையாளர் விக்ரம் கபூர்  தலைமையில் சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னை அண்ணா நகர், செனாய்நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், அயனாவரம் மற்றும் புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் மண்டல சுகாதார அலுவலரின் தலைமையில், சுகாதாரஆய்வாளர்கள்,    அலுவலர்கள் உதவி கால்நடை மருத்துவர்  ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுகாதாரமற்ற இறைச்சி பறிமுதல் செனாய் நகரில், இயங்கி வரும் இறைச்சி கடையில்   சோதனையின் போது சுமார் 100 கிலோ  எடையுள்ள சுகாதாரமற்ற இறைச்சி  விற்பனை  செய்வது கண்டறியப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்து வேலங்காடு மயான பூமியில் புதைக்கப்பட்டன .

சோதனையின் போது சுகாதாரமற்ற குளிர்பானங்கள்-20 பாட்டில்கள்,   தண்ணீர் கேன்கள்-8,

உணவு பொருட்கள் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்து வேலங்காடு மயான பூமியில் புதைக்கப்பட்டன.

சோதனையின் போது சுமார் 10 கிலோ எடையுள்ள பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.

எம்.ஜி.ஆர் காலனி, சோதனை மேற்கொள்ளப்பட்டன.  சோதனையின் போது சுமார் 2 டன்  எடையுள்ள டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள வணிக நிறுவனங்களை ஆய்வு செய்யும் போது 9 கடைகளில் குப்பைத்தொட்டி இல்லாதது கண்டறியப்பட்டு, அக்கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.4500 அபராதம் வசூலிக்கப்பட்டு மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி கட்டிடத்தில் சோதனையின் போது  கொசுப் புழுக்கள் கண்டறிந்து  அழிக்கப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமை யாளருக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு  83 மற்றும் 84ன் கீழ் தாக்கீது வழங்கப்பட்டன .

மேற்கண்ட நடவடிக்கைகள் மண்டலம்-8ல் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாநகராட்சி செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony