முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரை இறுதிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி, செப். 30  - சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முதல் அணியாக அடியெடுத்து வைத்துள்ளது. 

ராஞ்சியில் நடைபெற்ற பிரிஸ்பேன் ஹிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அரையிறுதி சாத்தியமானது. இந்த ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் பிரிஸ்பேன் நிர்ணயித்த 138 ரன்களை சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள சென்னை அணி விரைவாக எட்டியது. 

2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியின் தொடக்க வீரர்களிடம் பிரிஸ்பேன் வீரர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை. குறைவான ரன்களை எடுத்திருந்த பிரிஸ்பேன் அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியது. 

முரளி விஜய் இந்த ஆட்டத்திலும் தொடக்க வீரராக களம் இறங்கினார். 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த போது விஜய் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரெய்னா வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணியின் வெற்றி நெருங்கியது. ஹசி, ரெய்னா ஜோடி அணியை வெற்றி பெற வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 சிக்ஸர்களை விளாசிய ரெய்னா 28 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தோனி அந்த ஓவரின் 4 வது பந்தில் பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். வெற்றிக்கு மேலும் 4 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. வழக்கம் போல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் தோனி. ஆட்ட நாயகன் விருது ஹசிக்கு வழங்கப்பட்டது. சென்னை அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் பிரிஸ்பேன் வீரர்கள் தடுமாறினர். 10 அணிகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிக்கு முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதி பெற்றது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை அணி, 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதே சமயம் 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய பிரிஸ்பேன் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்