முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

98 துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை.அக்.1 தமிழக போலீஸ் துறையில், பதவி உயர்வு கொடுக்கப்படாமல் இருக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு கொடுக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று, தமிழகம் முழுவதும் 98 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், நேற்று கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நலப்பிரிவு மற்றும் மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக பணியாற்றிய திருமலைசாமி, அதே பிரிவில் பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை புழல் உதவி கமிஷனர் கந்தசாமி, சென்னை வடக்கு மதுவிலக்கு கூடுதல் துணை கமிஷனராக பதவி ஏற்பார். சென்னையில் மாநில உளவுப்பிரிவு துணை சூப்பிரண்டாக உள்ள குணசேகரன் அதே பிரிவில் பதவி உயர்வு பெற்றுள்ளார். கிண்டி உதவி கமிஷனர் சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கூடுதல் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார். இதேபோல சென்னையில் உதவி கமிஷனர்களாக பணியாற்றும் அலிபாஷா சேலத்துக்கும், சந்திரசேகரன் தர்மபுரிக்கும், ஜேக்கப் மாணிக்கராஜ் கடலூருக்கும், பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்கள் ஜுடுதுரைப்பாண்டியன், ஜெகபர்சாலி மற்றும் வரதட்சணை ஒழிப்பு பிரிவு உதவி கமிஷனர் சியாமளாதேவி ஆகியோரும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony